ராஜினாமா செய்யாத ஒன்பது துணை வேந்தர்களுக்கு கேரள கவர்னர் நோட்டீஸ் - கேரளத்தில் உச்சத்தில் அரசு, ஆளுநர் மோதல்

கேரளாவில் ராஜினாமா செய்யாத ஒன்பது பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Update: 2022-10-26 07:30 GMT

கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டதாக திருவனந்தபுரம் அப்துல் கலாம் தொழில் கழக துணை வேந்தர் ராஜஸ்ரீ நியமனத்தை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது. உடனே அத்தீர்ப்பை சுட்டிக்காட்டி ராஜஸ்ரீ உட்பட ஒன்பது பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று 24 ஆம் தேதி காலை 11:30 மணிக்குள் ராஜினாமா கடிதங்கள் தனக்கு வந்து சேர வேண்டும் என்றும் கவர்னர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டார்.ஆனால் யாருமே ராஜினாமா செய்ய முன்வரவில்லை. அதிகார வரம்பை மீறி கவர்னர் செயல்படக்கூடாது என்று முதல் மந்திரி பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்தார்.


இந்த நிலையில் ராஜினாமா செய்யாத ஒன்பது துணை வேந்தர்களுக்கும் கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். நவம்பர் மூன்றாம் தேதிக்குள் பதில் அனுப்புமாறு அவர் கூறியுள்ளார். சில துணைவேந்தர்கள் நன்றாக பணியாற்றிய போதிலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தான் செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜஸ்ரீ சென்னை ஐ.ஐ.டி.யில் எம். டெக் படித்தவர்,கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங்கில் பி.எச்.டி பட்டமும் அங்கு பெற்றுள்ளார்.





 


Similar News