கொரோனா வைரசை அழிக்க நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள்..

கொரோனா வைரசை அழிக்க நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள்..

Update: 2020-04-05 05:01 GMT

இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் விடுத்துள்ள பதிவில், புதுச்சேரி மாநிலம் மற்ற மாநிலங்களை காட்டிலும் தற்போது ஆரோக்கியமாக உள்ளது. இந்த நல்ல சூழல் உருவாவதற்கு காராணமான காவல் துறை, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.கொரானோ வைரசை வெற்றி கொள்ள நாம் பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்க வேண்டும். இந்த கிருமி அரக்கனை மனிதர்கள் தான் உருவாக்கி உள்ளனர்.

இதனை அழிக்க நாம் ஒன்றாக செயல்பட வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு கூறிய நேரங்களில் சமூக இடைவெளி விட்டு வாங்குவது நல்லது. மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது. அதன்படி அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நம் மாநிலத்திற்கு வந்து கொண்டுள்ளது. ஆதலால் மக்கள் கவலைப்பட தேவையில்லை.

உங்கள் பகுதியில் ஏதேனும் புகார் இருந்தால் 104, 1031 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால் குறைகளை சுகாதாரம் உள்ளிட்ட பல துறையினர் நிவர்த்தி செய்து கொடுப்பார்கள். மத்திய அரசு, புதுச்சேரி அரசின் மூலமாக பொதுமக்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் இந்திய மக்களை உணர்வு பூர்வமாக இணைக்க இன்று இரவு 9:00 மணி முதல் 9:09 மணி வரை 9 நிமிடங்கள், பொதுமக்கள் வீட்டில் உள்ள மின் விளக்கை அணைத்து, வீட்டின் வாசல்களில் மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்கு ஏற்றி, இந்தியா உணர்வு பூர்வமான நாடு என்பதை நாம் அனைவரும் கொண்டு வரவேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்றார்.

Similar News