காலமெல்லாம் உழைத்த குமரி ஆனந்தனுக்கு காங்கிரஸ் கொடுக்காத மரியாதை...அவரது மகளுக்கு வழங்கியது பாரதிய ஜனதா கட்சி!! வாழ்த்துக்கள் மேடம்

காலமெல்லாம் உழைத்த குமரி ஆனந்தனுக்கு காங்கிரஸ் கொடுக்காத மரியாதை...அவரது மகளுக்கு வழங்கியது பாரதிய ஜனதா கட்சி!! வாழ்த்துக்கள் மேடம்

Update: 2019-09-01 10:57 GMT

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. அனைவரும் அவருடைய கடும் உழைப்பையும், மனோ தைரியத்தையும், அவருடைய சமூக, அரசியல் பணிகளையும் பாராட்டி வருகின்றனர்.  


டாக்டர் தமிழிசை முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார். குமரி அனந்தன் அவர்கள் மறைந்த பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்,. காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்.


என்றாலும் காமராஜர் காலமானதும் இந்திராவின் ஏதேச்சதிகார தலைமையின் கீழ் டெல்லி காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் கட்சியை கொத்தடிமைபோல நடத்தியது. பழைய காங்கிரஸ்காரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. இதனால் மன வேதனை அடைந்த குமரி அனந்தன் 1980 களில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கினார். தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை அலட்சியம் செய்ததாலேயே இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறினார். 


அதன் பிறகு மீண்டும் காங்கிரசில் இணைந்தும் அவருடைய உழைப்புக்கும், காந்தீயவாதியான அவருடைய சாத்வீக போராட்டங்களுக்கும் காங்கிரஸ் அவருக்கு உரிய மரியாதை அளிக்காமல் புறக்கணித்தது. உண்மையான, நேர்மையான  காங்கிரஸ்காரர்களுக்கு மரியாதை அளிக்காத நிலையிலும் குமரி அனந்தன் ஒரு காந்தீய தொண்டனாகவே பெயரளவில் அந்த கட்சியிலேயே தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.    


இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பது பற்றி தந்தை குமரி அனந்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தமிழிசை உழைப்பாலும், ஆற்றலாலும் உயர்வு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய திறனுக்கும், உழைப்புக்கும் மதிப்பளிக்கப்பட்டுள்ளது வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Similar News