யூ ட்யூப் உணவு பிரியர்களால் ஆஹா, ஓஹோவென புகழப்பட்ட சேலம் பார்பிக்யூ ஹோட்டலில் கெட்டுப்போன மட்டனில் குருமா

யூ ட்யூப் புகழ் சேலம் பார்பிக்யூ ஹோட்டலில் கெட்டுப்போன மட்டன் கிரேவி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-09-19 06:56 GMT

யூ ட்யூப் புகழ் சேலம் பார்பிக்யூ ஹோட்டலில் கெட்டுப்போன மட்டன் கிரேவி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலத்தில் உள்ள பார்பிக்யூ ஹோட்டலில் கெட்டுப் போன மட்டன் கிரேவி வழங்கப்பட்டது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓட்டல் ஊழியர்களிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை தொடர்ந்து கேட்டு போன மட்டன் மற்றும் சிக்கன் இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றிய உள்ளனர்.

யூட்யூபை சேர்ந்த சில சேனல்கள் இந்த ஹோட்டலில் சென்று ருசித்து விதவிதமாக வீடியோ பதிவிட்டதால் இளைய தலைமுறை மத்தியில் பார்பிக்யூ ஹோட்டல் மிக பிரபலமான கடையாக மாறியது.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள இந்த பார்பிக்யூ ஹோட்டலில் சபரி என்ற வாடிக்கையாளர் மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி பணம் கொடுத்து வாங்கி சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது மட்டன் கிரேவி கேட்டு போன நிலையில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஹோட்டலுக்கு திரும்பி வந்து மேலாளரிடம் கொடுத்த போது அவர் கெட்டு போயிருச்சுன்னா கீழே ஊற்றி விடுங்கள் எனும் அலட்சியமாக கூறியதால் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்ட கிரேவியை கொடுத்துவிட்டு அலட்சியமாக பதில் கூறிய நிர்வாகத்திற்கு எதிராக குரல் எழுப்பினார் வாடிக்கையாளர் சபரி.

இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் அந்த ஹோட்டலில் சமையல் அறையில் நுழைந்து ஆய்வில் ஈடுபட்ட பொழுது அங்கிருந்து துர்நாற்றம் வீசி 5 கிலோ எடையுள்ள மட்டன் மற்றும் சிக்கன் இறைச்சிகளை கைப்பற்றினர்.

மேலும் அங்கிருந்து கெட்டுப் போன உணவுப் பொருட்கள், மைதா தேதி ஏதும் குறிப்பிடப்படாத மசாலா பொருட்கள் கைப்பற்றி அவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் பார்பிக் ஹோட்டல் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர் அதிகாரிகள்.


Source - Polimer News

Similar News