மாரத்தான் ஓட்டம், குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தி பிரதமர் பிறந்தநாளை மக்களுடன் கொண்டாடிய எல்.முருகன்
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு 5000 பேருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சி நடத்தி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு 5000 பேருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சி நடத்தி உள்ளார்.
பிரதமர் மோடி 72 வது பிறந்த நாளான இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தமிழகம் முழுவதும் 5000 நிகழ்ச்சிகள் நடந்துள்ளன அதில் மத்திய மீன்வளத்துறை சார்பாக சர்வதேச கடல் தூய்மைப்படுத்துதல் தினமாக கடைபிடிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு பெசன்ட் நகர் ஆல்காட் அரசு பள்ளியின் முன்பிருந்த அடையாறு பாலம் வரையில் ஆறு கிலோமீட்டர் தூர மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர் மத்திய அமைச்சர் எல்.முருகன் இந்த போட்டியை துவக்கி வைத்து பொதுமக்களுடன் ஓடினார். அவருடன் பா.ஜ.க மாநில செயலாளர்கள் வினோஜ் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்து அவரே குப்பைகளை எடுத்து சேகரித்து அகற்றினார். இந்த நிகழ்ச்சியில் இலவச மருத்துவ முகாமும், 2000 பேருக்கு பரிசோதனைகளும் நடத்தப்பட்டது.