இந்து – தமிழ் சைவத்துடன் தனித் தமிழ் இலக்கியத்தையும் தழைக்க வைத்தவர் மறைந்த தருமபுர ஆதீனம்! தமிழ் சான்றோர்கள் பாராட்டு!

இந்து – தமிழ் சைவத்துடன் தனித் தமிழ் இலக்கியத்தையும் தழைக்க வைத்தவர் மறைந்த தருமபுர ஆதீனம்! தமிழ் சான்றோர்கள் பாராட்டு!

Update: 2019-12-05 07:05 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் டிசம்பர் 4 ஆம் தேதி நேற்று மாலை தனது 93 வது வயதில் முக்தியடைந்தார்.


மறைந்த சுவாமிகளின் வழிகாட்டலால் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் என அழைக்கபடும் இந்த ஆதீனம் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், சங்க இலக்கியம், பன்னிரு திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் முதலான எண்ணற்ற சைவ இலக்கியங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இந்த இலக்கியங்களின் தாக்கத்தால் பல நிலைகளிலும் வளர்ந்து வரும் புதிய சிந்தனைகளையும், புத்தாக்க படைப்புகளையும் தமிழில் முறைப்படுத்தி வருகிறது.


அவற்றை முழுமையாக ஆய்வு செய்து பதிப்பித்தும், மரபு வழி நின்று ஆக்கப்பூர்வமான உயிரோட்டம் அளித்தும் அரும்பணி ஆற்றிவருகிறது.


இப்பணிகளை தெய்வ திருப்பணியாக ஏற்று தனது வாழ்நாள் முழுவதும் அரும் பாடுபட்ட குருமகா சந்நிதானம் மறைந்த சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் எனவும் அதனால்தான் தனி சிறப்பு பெற்ற ஆதீனமாக தருமபுர ஆதீனம் மிளிர்ந்து நின்றதாகவும்  தமிழகத்தில் உள்ள இந்து தமிழ் சான்றோர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கூரியுள்ளனர். அவர்கள் தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தியும்,  இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.  


Similar News