தமிழகத்தை அதிகாலையிலேயே உலுக்கிய கோர சம்பவம், தலைவர்கள் இரங்கல்!
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது அதன் ஒருபகுதியாக நடைபெற்ற தேர் பவனி மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர்
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது அதன் ஒருபகுதியாக நடைபெற்ற தேர் பவனி மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 15 பேர் படுகாயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த விபத்து தொடர்பாக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தெரிவித்த இரங்கல் செய்தியில் அவர் கூறியதாவது, 'தஞ்சாவூரில் நடைபெற்ற விபத்து குறித்து அறிந்ததும் மிகுந்த வேதனை அடைந்தேன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும்' என தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து கூறுகையில், 'தஞ்சை பெரிய கோவில் திருவிழாவில் பதினொரு பேர் உயிரிழந்த செய்தியறிந்து துயரமுற்றேன்' என கூறினார். மேலும் தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கி உத்தரவிட்டுள்ளார், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஆணையிட்ட அவர் விபத்து நடந்த தஞ்சாவூருக்கு கிராமத்திற்கு நேரில் செல்லவிருக்கிறார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'தஞ்சை களிமேடு தேர்பவனி விபத்து செய்தி கேள்விப்பட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன் மூன்று சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இறந்த இந்த சம்பவத்தை எனது மனம் ஏற்க மறுக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'தஞ்சாவூர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும்' எனக் கூறினார்.