2025 ஆம் ஆண்டு வரை 22 விமான நிலையங்கள் குத்தகைக்கு ஒப்படைப்பு

25 விமான நிலையங்கள் குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Update: 2023-03-14 06:30 GMT

தேசிய நிதிமயமாக்கல் திட்டத்தின் படி 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை இந்திய விமான நிலைய ஆணையம் 25 விமான நிலையங்களை குத்தகைக்கு ஒதுக்கி உள்ளது . இவற்றில் டெல்லி, மும்பை, அகமதாபாத் கௌகாத்தி, ஜெய்ப்பூர், லக்னோ, மங்களூர், திருவனந்தபுரம் ஆகிய எட்டு விமான நிலையங்கள் பொது தனியார் கூட்டாண்மை மூலம் குத்தகைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது . இதில் டெல்லி, மும்பை ஆகிய விமான நிலையங்கள் 2006 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டன.


கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லி விமான நிலையம் மூலம் சுமார் 5500 கோடியும் மும்பை விமான நிலையம் மூலம் 5,174 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது . இந்த தகவல்களை மாநிலங்களவையில் சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி. கே.சிங் தெரிவித்துள்ளார்.



 


Similar News