இந்த முறையும் 'பல்டி' அடித்த பள்ளிக்கல்வித்துறை - எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிப்பு

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கும் என அன்பில் மகேஷ் பல்டி அடிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2022-06-09 08:45 GMT

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கும் என அன்பில் மகேஷ் பல்டி அடிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்பட்டு அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்படுகிறது என்ற தகவல் நேற்று செய்திகளாக வெளியானது. இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் தமிழக அரசு தற்போது செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், 'எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை ஏற்று விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது' இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால பள்ளிக்கல்வித்துறையின் முடிவுகளில் முன்னுக்குப்பின் முரணான செயல்பாடுகள் இருப்பதை கண்டு தமிழக மக்கள் குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்கள் கவலை கொண்டுள்ளனர்.


Source - News 18 Tamil Nadu

Similar News