மாற்றுத் திறனாளி பயணிகளுக்கான ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு!

ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 'கீழ்படுக்கை' வசதி ஒதுக்க ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2023-04-13 07:00 GMT

எல்லாரும் தொலைதூர பயணத்துக்கு ரயில்களை தான் விரும்புகின்றனர். மாற்றுத்திறனாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு நடு படுக்கை அல்லது மேல்படுக்கை ஒதுக்கப்படுகிறது. அவர்கள் அவற்றை பயன்படுத்த சிரமப்படுகின்றனர். இனி அந்த பிரச்சனை இல்லை. இனி மாற்றுத்திறனாளிகளின் ரயில் பயணம் சுகமாகவும்  எளிதாகவும் மாறும்.


மெயில் மற்றும் விரைவு மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ்ப்படுகைகளை ஒதுக்க முன்னுரிமை வழங்க ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது அவர்களுடன் செல்கிற உதவியாளர்களுக்கு நடுபடுகைகள் ஒதுக்கப்படும் இது தொடர்பாக ரயில்வே மண்டல அலுவலர்களுக்கு ரயில்வே வரையும் உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளது அந்த உத்தரவில் மாற்று திறனாளிகளுக்கும் அவர்களது உதவியாளர்களுக்கும் சிலிப்பர் கிளாசிஸ் 2 கீழ்படுக்கை மற்றும் 2 நடு படுக்கை ஒதுக்கப்பட வேண்டும். மூன்றெழுத்து ஏசி பெட்டிகளில் ஒரு கீழ்படிக்கை ஒரு நடு படுக்கையும் மூன்றடுக்கு எக்கனாமி ஏசி பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கையும் ஒரு நடு படுக்கையும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பயணங்களில் கட்டண சலுகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.




Similar News