தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஒழுங்குமுறை ஆணைய சட்ட உறுப்பினரை நியமிக்கும் வரை தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை.மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டும் உள்ளனர்.சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்கு முறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்ப்பட்டது.
இந்த மனுவை ஒழங்கு முறை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும்போது ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் கட்டணம் உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கவும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தமிழ்நாடு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட உறுப்பினராக வெங்கிடசாமி கடந்த 17.02.2019 அன்று நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 05.05. 2002 அன்று ஓய்வு பெற்றுவிட்டார். தொழிநுட்ப உறுப்பினராக இருந்தவர் கடந்த 17ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார. இந்த உறுப்பினர் பதவிக்கு மட்டும் தகுதியான நபரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 2 பேரை பரிந்துரைத்ததிருக்கிறது. இதனை வெங்கடேசனை தொழில்நுட்ப உறுப்பினராக மாநில அரசு தேர்வு செய்தது. அவர் கடந்த மாதம் 18ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.