மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் - மதுரையில் தீவிர விசாரணையில் என்.ஐ.ஏ, பின்னணி என்ன?

மதுரை பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதுரையில் இரண்டாவது நாளாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2022-11-28 02:01 GMT

மதுரை பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதுரையில் இரண்டாவது நாளாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநில மங்களூரில் கடந்த வாரம் சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயங்கரவாதி இருவரும் படுகாயம் அடைந்தனர், இந்த சம்பவத்தை கர்நாடக காவல்துறை தீவிரவாத தாக்குதல் என அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த தீவிரவாதி குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். இந்த குற்றவாளி ஷரீக் என்பவர் மதுரையில் 15 நாட்கள் தங்கி இருந்ததும், குண்டு வெடிப்புக்கு முன் பலரை சந்தித்து பேசியதும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மங்களூரு காவல்துறை அதிகாரிகள் மதுரையில் விசாரிக்க வந்துள்ளனர். அவர்களுடன் என்.ஐ.ஏ அதிகாரிகளும் மதுரை நகரில் உள்ள சில தங்கும் விடுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக என்.ஐ.ஏ அதிகாரிகள் மதுரையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் முடிவில் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Source - Dinamani

Similar News