இந்தியாவில் மட்டும் தான் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு - லண்டன், அமெரிக்காவில் ஆதரவு தெரிவித்து தெறிக்க விட்ட இந்திய வம்சாவளியினர்.!

இந்தியாவில் மட்டும் தான் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு - லண்டன், அமெரிக்காவில் ஆதரவு தெரிவித்து தெறிக்க விட்ட இந்திய வம்சாவளியினர்.!

Update: 2020-01-06 11:04 GMT

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்துள்ளது.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.





இதற்கிடையே, குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வெளிநாடுகளிலும் இதுபோன்ற பேரணிகள் நடந்து வருகின்றன.


இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் நேற்று பேரணி நடத்தினர்.


அதே நேரம், குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் பேரணியில் ஈடுபட்டனர்.


லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணியாக சென்றனர். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக முழக்கங்களையும் எழுப்பினர்.






Similar News