வெளிநாடுகளை மிஞ்சும் வகையில் இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை விரிவு படுத்தப்படும் - மத்திய அமைச்சர் ஹார்தீப் சிங் பூரி

வெளிநாடுகளை மிஞ்சும் வகையில் இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என மத்திய மந்திரி கூறினார்.

Update: 2022-10-28 13:30 GMT

சென்னையில் நடந்த மெட்ரோ ரயில் தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹார்தீப் சிங் பூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது :-


சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் கூட்டாட்சி முறைக்கு உதாரணமாக விளங்குகிறது. நாடு முழுவதும் தற்போது 810 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு பெருமை அளிக்கும் வகையில் உள்ளது. ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரயில் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன நகர்ப்புற போக்குவரத்து முறையில் இ.து புரட்சிகரமானது .


மெட்ரோ ரயில் போக்குவரத்தை பயன்படுத்தும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. மெட்ரோ ரயில் பயன்பாட்டில் ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை இந்தியா மிஞ்சும் வகையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் விரிவுபடுத்தப்படும். சென்னை மெட்ரோ ரயில் கொரோனாவுக்கு முன்பு பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை விட தற்போது மூன்று மடங்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





 


Similar News