திருவாரூர் மாவட்டத்தில் காணாமல் போன சோழர்கால சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

திருவாரூர் மாவட்டத்திலுள்ள சோழர்கால இரண்டு பழங்கால சாமி சிலைகளை அமெரிக்காவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு.

Update: 2022-10-25 10:36 GMT

திருவாரூர் மாவட்டத்திலுள்ள சோழர்கால இரண்டு பழங்கால சாமி சிலைகளை அமெரிக்காவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு.

திருவாரூர் மாவட்டம் ஆலந்தூர் விஸ்வநாதன் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால இரண்டு சாமி சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடத்தி பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

வாஷிங்டன் டி.சியில் உள்ள பெயர் பிரியர் சாக்லர் அருங்காட்சியத்தில் சோமாஸ் கந்தர் சிலையையும், கிரிஸ்டிஸ் டாட் காம் இணையத்தில் நடந்த சம்மந்தர் சிலையும் இருப்பதையும் 2011 ஆம் ஆண்டு 98,500 டாலருக்கு இந்த சிலைகள் விற்கப்பட்டு இருப்பதையும் கண்டுபிடித்த போலீசார் அதனை தமிழகத்திற்கு கொண்டு வர தேவையான அனைத்து ஆவணங்களையும் மாநில அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.



Source - Polimer News

Similar News