மு.க.ஸ்டாலினின் புதிய உளறல்! வைரலானது வீடியோ! வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!

மு.க.ஸ்டாலினின் புதிய உளறல்! வைரலானது வீடியோ! வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!

Update: 2019-09-12 09:33 GMT


சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலையில், பதிகம் என்னும் குதியில் இடம் ற்றுள்ள பாடலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு யாரோ எழுதி கொடுத்துள்ளனர். அந்த துண்டு சீட்டைப் பார்த்து வாசித்தும், மேடையில் உளறி கெடுத்துள்ளார்.


அந்த பாடல் வரிகள் வருமாறு:-


“கோள்நிலை திரிந்து
கோடை நீடினும்
தான்நிலை திரியாத்
தண்தமிழ்ப் பாவை”
(24,25)


“கோள்கள் நிலை மாறி, கோடைக் காலம் நீடித்தாலும், தனது பழைய நிலையிலிருந்து மாறாமல் தொடர்ந்து நீர்வளம் நல்கும் குளிர்ந்த தமிழ்ப் பெண் காவிரி” - என்பது இந்த பாடலின் பொருள்.


இந்த பாடல் வரிகளை மேடையில் வாசித்து “நானும் தமிழன்தான்” என்று நிரூபிப்பதற்காக முயற்சி செய்தார் ஸ்டாலின்.


துண்டு சீட்டைப் பார்த்து எழுதி கொடுத்ததை வாசித்துவிட்டார். “அப்பாடா, ஒருவழியாக உளறாமல், ஓரளவு சரியாக வாசித்துவிட்டாரே” என்று உடன்பிறப்புகள் தங்களின் காலரை தூக்கி விடுவதற்கு முன்னரே, ஸ்டாலின் உளறி கொட்டி விட்டார்.


அவர் என்ன செய்வார்? பாவம் - பழக்க தோஷம், உளறிவிட்டார்.


அப்படி என்ன உளறினார்? என்றுதானே கேட்கிறீர்கள்?





குழந்தையின் தந்தை பெயரை மாற்றி விட்டார். ஆமாம். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான “மணிமேகலை” என்ற மாபெரும் காப்பியத்தை எழுதிய புலவர் சீத்தலை சாத்தனாரை காலி செய்துவிட்டார்.


புலவர் சீத்தலை சாத்தனாரை கொன்று விட்டு அவருக்கு பதிலாக “கீர்த்தனார்” என்ற பெயரை புகுத்திவிட்டார். எந்த கீர்த்தனா பெயரோ இது, தெரியவில்லை.


“துண்டு சீட்டைப் பார்த்து பாடல் வரிகளை சரியாக வாசிக்காவிட்டாலும், ஓரளவு வாசித்து விட்டார். ஆனால் ஸ்டாலின் கெரகம், புலவரின் பெயரை மட்டும் துண்டு சீட்டை பார்த்து வாசிக்காமல், அவராக சொன்னதால், சீத்தலை சாத்தனார் என்பதற்குப் பதிலாக, கீர்த்தனார் என்று கூறிவிட்டார்” என்கின்றனர் உடன்பிறப்புகள்.


ஏற்கனவே, “யானைவரும் முன்னே...”, “பூனைமேல் மதில்...” என்று தமிழ்ப் பழமொழிகளை எல்லாம் கடித்து குதறினார்.


தனது ஆங்கிலப்புலமை உலகறியச் செய்வதற்காக, “A VACCUM IS FILED AS IT IS SRIED" உன்று உளறி கொட்டி, நெட்டிசன்களிடம் வாங்கி கட்டினார்.


தனது கணித அறிவை, “86+9 = 97” என்று உளறுவாயால் திருவாய் மலர்ந்து, சந்தி சிரிக்க வைத்தார்.


“சுதந்திர தினம் டிசம்பர் - 25” என்று பொதுமேடையில் பேசி அசிங்கப்பட்டார்.


“நான் ஜப்பான் துணை முதலமைச்சராக இருந்தபோது” என்று உளறி தனது பொது அறிவை உலகறியச் செய்தார்.


ஸ்டாலினின் உளறல் வரிசையில் புதிதாக இடம் பெற்றுள்ளது, “கீர்த்தனார்”.


ஸ்டாலின் இந்த புதிய உளறல் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் ஸ்டாலினை வெச்சி செய்து வருகின்றனர்.


Similar News