ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு - ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அவகாசம்.! #MKStalin #PollachiJayaraman #PollachiCase

ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு - ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அவகாசம்.! #MKStalin #PollachiJayaraman #PollachiCase

Update: 2020-07-21 13:32 GMT

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை சம்பந்தப்படுத்தி பேசியதற்கு ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்களை ஸ்டாலின் பேசிவருவதாகவும், தன்னை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டுமென பொள்ளாச்சி ஜெயராமன் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பொள்ளாச்சி ஜெயராமன் குறித்த ஸ்டாலினின் பேச்சை செய்தியாக வெளியிட்ட, தொலைக்காட்சி, நக்கீரன், வார இதழ் ஆசியர்களையும் எதிர்மனு தாரர்களாக சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Similar News