ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கும் கோவை மூதாட்டிக்கு மோடி அரசு உதவிக்ககரம் நீட்டியது!!

ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கும் கோவை மூதாட்டிக்கு மோடி அரசு உதவிக்ககரம் நீட்டியது!!

Update: 2019-09-13 10:20 GMT


கோவை வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள் பாடடி. 80 வயதான இந்த பாட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி கடை நடத்தி வருகிறார். ஒரு இட்லி ஒரு ரூபாய் என விற்று தொழில் நடத்தி வரும் பாட்டி குறித்த செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலானது. காசுக்காக இல்லாமல் மக்களின் பசியைத் தீர்ப்பதே முக்கியம் என்ற பாட்டியின் நல்ல மனசுக்கு பாராட்டுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.


இந்நிலையில், மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா இவர் குறித்த தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் அறிந்து பாட்டிக்கு தொழிலில் முதலீடு செய்து உதவுவதாக அறிவித்திருந்தார். மேலும் இதே செய்தியை டுவிட்டர் மூலம் அறிந்து கொண்ட மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக கமலாத்தாள் பாட்டிக்கு உதவி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து மத்திய அரசின் உதவிக்கரமும் பாட்டிக்கு கிடைத்துள்ளது.


https://tamil.news18.com/


Similar News