சாதனை படைக்கும் ஜல் சக்தி அபியான் திட்டம் : நாடு தழுவிய சிக்கலான தண்ணீர் பிரச்சனைக்கு சிரத்தை எடுத்து பணியாற்றும் மத்திய அரசு..!

சாதனை படைக்கும் ஜல் சக்தி அபியான் திட்டம் : நாடு தழுவிய சிக்கலான தண்ணீர் பிரச்சனைக்கு சிரத்தை எடுத்து பணியாற்றும் மத்திய அரசு..!

Update: 2019-07-12 04:33 GMT

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. இந்த
பிரச்சினையை சரிசெய்யவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் ஜல் சக்தி
அபியான் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக மத்திய அரசைச்
சேர்ந்த 255 மூத்த அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


ஜல் சக்தி அபியான் திட்டம் கடந்த ஜூலை 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் அதிகாரிகள் அனைவரும் கூடுதல் செயலர்கள், இணைச் செயலர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள்.


இவர்கள் மத்திய அரசு அதிகாரிகள், இயக்குநர், துணைச் செயலர்கள் பதவி அந்தஸ்தில் உள்ளவர்கள், நீர் ஆதாரத்துறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மாநில, மாவட்டக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவர்.


இதையும் படிக்க: தமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி


இந்த 255 அதிகாரிகளும், தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பொறுப்பு அதிகாரிகளாக இருப்பார்கள். அவர்களுடன் இணைந்து குடிநீர் பிரச்சினை, தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க, தீர்வுகளை அளிப்பார்கள். இந்தத் திட்டம் ஜூலை 1-ம் தேதி தொடங்கிய நிலையில் செப்டம்பர் 15-ம் தேதி வரை குறிப்பிட்ட நகரங்களில் அமலில் இருக்கும்.


36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 255 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை இருப்பதாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடிநீர், தண்ணீர் பிரச்சினைகள் தொடர்பாக ஜல் சக்தி துறையின் இணையதளத்தில் தங்களது அறிக்கைகளை பதிவு செய்வார்கள் என்று தெரியவந்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் துரித கதியில் அரசு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.


Similar News