33,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

33,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

Update: 2019-02-19 12:28 GMT

பீகார் மாநிலத்தில் பாட்னா மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட 33,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி  அடிக்கல் நாட்டினார்.டெல்லியில் இருந்து அரசுமுறை பயணமாக பீகார் மாநிலம், பரவுனி நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி பாட்னா நகரத்தில் குழாய் மூலம் எரிவாயு வினியோக திட்டத்தை தொடங்கி வைத்தார். புர்னியா, சாப்ரா மாவட்ட மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுமார் 100 கிலோமீட்டர் நீளத்தில் கர்மலிசாக் வடிகால் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியை பாட்னாவுடன் இணைக்கும் வகையில் மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதையை தொடங்கி வைத்ததுடன் இந்த வழித்தடத்தில் ராஞ்சி-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


பரவுனி மாவட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை நவீனமயமாக்கி, விரிவாக்கம் செய்யும் திட்டம் மற்றும் பாட்னா நகருக்கான புதிய மெட்ரோ ரெயில் சேவை திட்டம் உள்பட சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் பாகல்பூர் பகுதியை சேர்ந்த ரத்தன் குமார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
புல்வாமா தாக்குதலால் உங்கள் நெஞ்சில் கொந்தளிக்கும் நெருப்பு என்னுடைய இதயத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது என்பதை இங்கு கூடியுள்ள மக்களுக்கு நான் தெரிவித்து கொள்கிறேன். குழாய் மூலம் எரிவாயு வழங்கும் ‘உஜ்ரா கங்கா யோஜானா’ திட்டத்தின் மூலம் பீகார் மட்டுமின்றி அருகாமையில் உள்ள ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களும் சிறப்பான வளர்ச்சியை பெறும் என மோடி தெரிவித்தார்.




https://www.news18.com/news/india/fire-raging-within-you-rages-within-me-too-says-modi-in-bihar-rally-2039295.html



Similar News