மோடி ஒரு தேசபக்தர், எதிர்காலம் இந்தியாவுக்கானது - ரஷ்ய அதிபரின் புகழாரம்

இந்திய பிரதமர் மோடி ஒரு தேசபக்தர் என்றும் எதிர்காலம் இந்தியாவுக்கானது என்றும் ரஷ்ய அதிபர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்

Update: 2022-10-29 06:00 GMT

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 8 மாதங்களுக்கு மேலாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உக்கிரைனுக்கு ஆதரவாக நிற்கின்றன. அதோடு இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதே வேளையில் உக்கிரைன் போர் விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலையை கடைபிடித்து வருகிறது. இந்த பிரச்சினையில் ரஷ்யாவை இதுவரை கண்டிக்காத இந்தியா, தூதரகம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இரு தரப்பையும் வலியுறுத்தி வருகிறது.


இது ஒரு புறம் இருக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா இந்தியாவுக்கு மளிகை விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த நாட்டின் அதிபர் புதின் இந்திய தேசத்தையும் பிரதமர் நரேந்திர மோடியையும் வெகுவாக பாராட்டியுள்ளார். மாஸ்கோவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் சர்வதேச வல்டாய் டிஸ்கஷன் கிளப் என்கிற சிந்தனை அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று பேசிய புதின் இந்தியா குறித்தும் மோடி குறித்தும் பேசியதாவது:-


இந்தியாவுடன் எங்களுக்கு சிறப்பான உறவுகள் உள்ளன. அவை பல தசாப்தங்களாக நெருங்கிய நட்பு உறவுகளின் அடித்தளத்தில் கட்டப்பட்டவை. இந்தியாவுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் ஆதரித்து வருகிறோம். எதிர்காலத்திலும் அது அப்படியே இருக்கும் என்று நான் நம்புகிறேன். தனது நாட்டின் நலனுக்காகவும் மக்களுக்காகவும் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை தொடரக்கூடிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இன்று நவீன நாடக இந்தியா கண்டுள்ள வளர்ச்சி பிரமாண்டமானது .இந்தியா உலகில் உள்ள அனைவரிடமிருந்தும் பொதுவான மரியாதையை ஈர்க்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில் சமீப ஆண்டுகளில் அந்த நாடு நிறைய செய்துள்ளது. அவர் தனது நாட்டின் உண்மையான தேசபக்தர் அவரது 'மேக் இன் இந்தியா' திட்டம் குறிப்பிடத்தக்க முயற்சி இந்தியா உண்மையில் அதன் வளர்ச்சியில் முன்னேறி உள்ளது.ஒரு சிறந்த எதிர்காலம் அதற்கு முன்னால் உள்ளது.


இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல.இந்த வார்த்தையின் நல்ல அர்த்தத்தில் அதன் வளர்ச்சி விகிதத்திலும் பெருமைப்பட வேண்டும். அதுவே இந்தியாவில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை. ராணுவ மற்றும் தொழில்நுட்பத்து துறைகளில் ரஷ்யாவும் இந்தியாவும் தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றன. அதோடு இரு நாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பும் வளர்ந்து வருகிறது. இந்தியா விவசாயத்திற்கு முக்கியமான ஒரு விநியோகத்தை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டார். நாங்கள் அதை செய்துள்ளோம். முன்பு வழங்கியதை விட 7.6 மடங்கு அதிகமாக உரங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம் இவ்வாறு புதன் பேசினார்.





 



Similar News