புதிய திருத்தங்களுடன் கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்டம்.!

புதிய திருத்தங்களுடன் கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்டம்.!

Update: 2021-02-07 16:04 GMT

தற்போது இருசக்கர மற்றும் பிற வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கான நடைமுறையில் அதிரடி மாற்றங்களுடன் கொண்டுவர  உள்ளனர். மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் தலைவர் நிதின் கட்கரி தலைமையில் புதிய மாற்றங்களுடன் வாகன சட்டங்களை அறிவிக்கவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மேலும் கொண்டுவரவுள்ள புதிய மோட்டார் வாகன உரிமம் பெறுவதற்கான சட்டங்களில், மோட்டார் வாகனங்களுக்குப் பயிற்சியளிக்கும் நிறுவனங்களை முடிவுக்குக் கொண்டுவரவும்  மற்றும் பயிற்சி பெறுவோருக்குச் சோதனை செய்யும்  முறையிலும் மாற்றம் வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
 

இதுதவிர ஓட்டுநர் உரிமங்களைப் பெற அரசு அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களிடம் மாட்டிக்கொள்வதைத் தடுக்கவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு உரிமம் தகுதியாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள

Similar News