சென்னை உயர்நீதிமன்றம் அருகில் மலைக்குறவர் தீக்குளிப்பு முயற்சி - காப்பாற்ற முயன்ற காவலருக்கு தீக்காயம்

சென்னை உயர்நீதிமன்றம் அருகில் மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த நபர் தீக்குளித்த தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-12 09:14 GMT

சென்னை உயர்நீதிமன்றம் அருகில் மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த நபர் தீக்குளித்த தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரத்தை அடுத்த படப்பையில் வசிக்கும் வேல்முருகன் தனது மகனுக்கு பலமுறை ஜாதி சான்றிதழ் கேட்டுட்டு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து உயர் நீதிமன்றம் அருகே உள்ள தமிழ்நாடு சட்டப் பணிகள் அலுவலகத்திற்கு முறையிடுவதற்கு அவர் வருகை புரிந்தார்.

அந்த சமயம் கையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி கொண்டு வந்தார். அப்போது அவரை போலீசார் தடுத்து சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது திடீரென லைட்டரை பற்ற வைத்ததில் உடலில் தீ பற்றிக்கொண்டது. உடனே போலீசார் வேல்முருகனை காப்பாற்று மருத்துவமனையில் சேர்த்தார்கள் வேல்முருகனை காப்பாற்ற முயன்ற உதவி ஆய்வாளர் தினகரனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.



Source - Polimer News

Similar News