பிறந்த குழந்தைக்கு மோடியின் பெயரை வைத்து மோடியின் வெற்றியை கொண்டாடிய முஸ்லீம் தம்பதியர்!!

பிறந்த குழந்தைக்கு மோடியின் பெயரை வைத்து மோடியின் வெற்றியை கொண்டாடிய முஸ்லீம் தம்பதியர்!!

Update: 2019-05-26 07:15 GMT

ஏப்ரல் மாதம் முதல் ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வந்த17-வது லோக்சபாவிற்கான தேர்தல் முடிவுகள் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டன.இதில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.


இந்நிலையில் உ.பி., மாநிலம் கோண்டா அருகே உள்ள வாசிர்கன்ஜ் பகுதியை சேர்ந்தவர் மேனஜ் பேகம். இவரது கணவர் முஸ்டாக் அகமது வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். முஸ்லிம் மதத்தை சேர்ந்த இந்த தம்பதியினருக்கு தேர்தல் முடிவு வெளியான 23-ம் தேதி ஆண்குழந்தை பிறந்தது. பிரதமராக யார் வந்துள்ளார் என மனைவியிடம் கேட்டார். அப்போது அவர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார் என மேஜன் பேகம் தெரிவித்துள்ளார்.
உடனே தம்பதிகள் குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயர் சூட்டுவது என்று முடிவு செய்தனர். இதற்குமேனஜ் பேகமின் மாமனார் மொகமத் இத்ரிஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் அது அவர்களின் குடும்ப விசயம். மற்றவர்கள் அதில் தலையிடமுடியாது என்றும் கூறினார். இதனையடுத்து குழந்தையின் பெயர் நரேந்திர தோமர் தாஸ் மோடி என பதிவு செய்யப்பட்டது.


Similar News