மாநிலங்களவையை நடத்திய நாகாலாந்தின் முதல் பெண் எம்.பி

நாகலாந்தில் முதன்முதலாக பெண் எம்.பி மாநிலங்களவையை நடத்தியுள்ளார்.

Update: 2023-07-26 06:30 GMT

மாநிலங்களவை தலைவர் இல்லாத நேரங்களில் அவை நடத்தும் பொறுப்பு துணைத்தலைவர்கள் வசம் செல்லும். தற்போதைய மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக துணை தலைவர்கள் குழு சீரமைக்கப்பட்டது. அதன்படி நான்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மொத்தம் எட்டு பேரை புதிய துணை தலைவர்களாக அவை தலைவர் ஜக்தீப் தன்கர் நியமித்துள்ளார்.


துணை தலைவர்களாக நியமிக்கப்பட்ட அனைத்து பெண் உறுப்பினர்களும் முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர். அதன்படி நாகலாந்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணான பா.ஜ.கவை சேர்ந்த பாங்னோன் கொன்யாக் மாநிலங்களவை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்கு பாங்னோன் கொன்யாக் தலைமை தாங்கினார். அவர் தலைமை வகித்த போது அவையில் அரசியலமைப்பு ஆணை மசோதா 2022 நிறைவேற்றப்பட்டது.


SOURCE :DAILY THANTHI

Similar News