உத்தரகண்டில் இயற்கையாக உருவானது புதிய ஏரி: இயற்கை பேரழிவால் நடந்த அதிசயம்.!

உத்தரகண்டில் இயற்கையாக உருவானது புதிய ஏரி: இயற்கை பேரழிவால் நடந்த அதிசயம்.!

Update: 2021-02-20 16:34 GMT

அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்திய பனிப்பாறை வெடிப்புக்குப் பின்னர், அம்மாநிலத்தின் முரேண்டா பகுதியில் இயற்கையாக ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை குழு (ITBP) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) அதிகாரிகளுடன் இணைந்து கடந்த புதன்கிழமை இயற்கை ஏரி உருவாகியுள்ள முரேண்டாவை அடைந்தது.

இந்த குழு தனது அடிப்படை முகாமை ஏரிக்கு அருகில் நிறுவியுள்ளதுடன், ஹெலிபேட் தயாரிப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று ITBP  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமானக் குழுவிற்கு வழிகாட்ட சரியான குறிப்புகள் மற்றும் பிற உதவிகளுடன் ஹெலிபேட் உருவாக்கப்பட்டு வருகிறது. “DRDO  குழுவுடன் ஒரு ITBP அணியும் பகல் நேரத்தில் ஏரி பகுதிக்கு முன்னேறியது” என்று அந்த அதிகாரி கூறினார்.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு காரணமாக உருவான ஏரியினால் வெள்ள அச்சுறுத்தல் உருவாவதை தடுக்க ஏரியின் சரியான இடத்தை குழு கண்காணிக்கும் என்று ITBP அதிகாரி தெரிவித்தார். ஏரி நீரை சீராக வெளியேற்றுவதற்கான வழிகளை ITBP குழு தொடங்கியுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். பனிச்சரிவு எனும் இயற்கை பேரழிவு உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தி, 50 க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய நிலையில்,  இங்கு இயற்கை சீரழிவால், இயற்கையாக ஒரு ஏரி உருவாகியுள்ளது அதிசயம் தான். 

Similar News