₹40,000 கோடி கூடுதல் செலவில் புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு ஒப்புதல் அளித்த மத்திய மோடி அரசு

₹40,000 கோடி கூடுதல் செலவில் புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு ஒப்புதல் அளித்த மத்திய மோடி அரசு

Update: 2018-09-12 18:22 GMT

விலை வீழ்ச்சியினால் தங்கள் விளைபொருட்களுக்கான லாபம் ஈட்ட முடியாமல் போவது, மோசமான சந்தைப்படுத்தல் வசதிகள், அதிகரிக்கும் கடன் சுமை, இடுபொருட்களின் விலை அதிகரிப்புகள், அடிக்கடி நிகழும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அழிவு ஆகியவற்றினால் வேளாண்மைத் துறை பிரச்சினைகளை நாம் குறுகிய கால பிரச்சினையாக அறுதியிடுகிறோம்.
ஆந்திராவில் 2011-ம் ஆண்டு கரீப் பருவத்தில் பயிர் செய்ய மாட்டோம், ‘பயிர் விடுமுறை’ என்று விவசாயப் போராட்டம் வெடித்தது. ஊரக இந்தியாவில் இத்தகைய போராட்டங்கள் நம் நாட்டின் உணவுப்பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகும்.
வேளாண்மை சந்திக்கும் பிரச்சினைகள் நிரந்தர அம்சமாக மாறிவிட்டதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தோல்விகள் மட்டும் காரணமல்ல, மாறாக உள்ளூர் சமூக அமைப்புகள், சமூக வலைப்பின்னல்கள் ஆகியவற்றின் வீழ்ச்சியுமாகும். அனைவரும் தனிமைப்பட்டு போனதும் வேளாண் துயரத்துக்கு காரணமாக உள்ளது. இதனால் உதவிக்கரம் நீட்ட ஆளின்றி, ஆதரவின்றி தத்தளிக்கும் விவசாயிகள் தற்கொலை என்ற சோக முடிவுக்குச் செல்கின்றனர்.



இதனையெல்லாம் தடுக்கும் பொருட்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய பயிர் கொள்முதல் கொள்கை கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில், புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எத்தனால் விலையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் 22 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, புதிய பயிர் கொள்முதல் கொள்கையை பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் வெளியிட்டார். அதில், நெல், கோதுமை, சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர் வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 22 வகை விளைபொருட்களுக்கான உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை அனைவருக்கும் கிடைக்கும். இந்த புதிய திட்டத்தினால், மத்திய அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். வரும் காரிப் பருவ அறுவடைக் காலத்தில் இருந்து இந்த புதிய கொள்முதல் விலை அமலுக்கு வரும். இது தவிர பெட்ரோல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எத்தனால் விலையை 25 சதவீதம் உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, எத்தனால் விலை 47 ரூபாய் 50காசில் இருந்து 52 ரூபாய் 43 காசுகளாக உயர்த்தப்படுகிறது.
எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மாத சராசரி அடிப்படையிலான சந்தை விலைக்கும், குறைந்தபட்ச ஆதார விலைக்கும் இடையிலான விலை வேறுபாட்டை அரசே விவசாயிகளுக்கு வழங்கும்.

Similar News