புதிய இந்தியாவுக்கு பெரிய கனவுகளும், அவற்றை நனவாக்கும் மன உறுதியும் உள்ளது - மும்பை விழாவில் பிரதமர் மோடி பேச்சு

புதிய இந்தியாவுக்கு பெரிய கனவுகளும் அவற்றை நினைவாக்கும் மன உறுதியும் உள்ளது என்று மும்பையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

Update: 2023-01-20 07:45 GMT

மும்பையில் ரூபாய் 38 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற திட்டங்கள் மற்றும் புதிய திட்ட பணிகளை பிரதமர் மோடி நேற்று மாலை தொடங்கி வைத்தார். விழாவில் அவருக்கு மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை முதல் மந்திரி மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வழங்கினார். பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-


கடந்த நூற்றாண்டு காலம் வறுமையை பற்றி விவாதிப்பதிலும் வெளிநாடுகளில் உதவியை பெறுவதிலும்  போய்விட்டது. ஆனால் புதிய இந்தியா பெரிய கனவுகளையும் அவற்றை நினைவாக்கும் மன உறுதியையும் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்கள் நாட்டின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த போகின்றன. இதே போல மும்பையை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவது இரட்டைஎன்ஜின் அரசின் முக்கிய கடமையாகும். அடுத்த சில ஆண்டுகளில் மும்பை நகரம் முற்றிலுமாக மாற்றப்படும். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் கடும் வீழ்ச்சியில் இருக்கும் நிலையிலும் இந்தியா தொடர்ந்து எண்பது கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும் இந்தியா தொடர்ந்து உள்கட்டமைப்பில் முதலீடு செய்து வருகிறது. இது வளர்ந்த நாடாக தொடர்ந்து இருப்பதற்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது.


முன்பெல்லாம் ஏழைகளின் நலனுக்காக பணத்தை இடைத்தரகர்கள் அபகரித்து வந்தனர் . கடந்த எட்டு ஆண்டு கால ஆட்சியில் நாங்கள் இந்த அணுகுமுறையை மாற்றி அமைத்துள்ளோம். மேலும் நவீன உட்கட்டமைப்புக்காக அதிக செலவு செய்வதன் மூலம் எதிர்கால சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறோம். முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்ற பிறகு மராட்டியத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி முழு வீட்டில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



 


Similar News