ஊரடங்கின்போது ஊர் சுற்றிய நியூஸிலாந்த் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி பறிப்பு...

ஊரடங்கின்போது ஊர் சுற்றிய நியூஸிலாந்த் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி பறிப்பு...

Update: 2020-04-08 07:54 GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல உலக நாடுகள் ஊரடங்கை கடை பிடித்து வருகின்றன.

இந்நிலையில், நியூசிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமானதால், கடந்த மாதம் 25-ம் தேதி அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவை நியூசிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட் கிளார்க் மீறியுள்ளார்.

ஊரடங்கின்போது தனது குடும்பத்துடன் கடற்கரைக்கு காரில் உலா வந்துள்ளார்.

இந்த சம்பவத்தை ஊடகத்தினர் படம் பிடித்துள்ளனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மக்கள் டேவிட் கிளார்க்கை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இதனையடுத்து தனது தவறை ஒப்புக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட் கிளார்க், வருத்தம் தெரிவித்ததோடு பிரதமர் ஜெசிந்தாவிடம் தனது ராஜினமா கடிதத்தை வழங்கினார்.

ஆனால் அவரது ராஜினாமாவை பிரதமர் ஏற்கவில்லை. அதே சமயம் அவர் சுகாதாரத்துறை இணை அமைச்சராக பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

இது பற்றி பிரதமர் ஜெசிந்தா கூறியதாவது: "டேவிட் கிளார்க் செய்த குற்றத்துக்கு அவரை நானே பதவி நீக்கம் செய்திருப்பேன்.

ஆனால் கொரோனா தொற்று பாதிப்புகளை சமாளிக்க அவரது பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதால் அவரை இணை அமைச்சராக பொறுப்பு கொடுத்துள்ளேன் என்று கூறினார். 

Similar News