போதைபொருள் கடத்தல் கும்பல் முக்கிய குற்றவாளி ஜாபர் கைது!

Update: 2024-03-09 10:33 GMT

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அன்று டெல்லி போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 75 கோடி ரூபாய் சூட்டோபெட்ரின் எனப்படுகின்ற போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருளை கைப்பற்றினர். அதோடு இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த முகேஷ் மற்றும் முஜிபுர் ரஹ்மான் விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து அதிகாரிகள் மேற்கொள்ள விசாரணையில் இந்த போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவராக சென்னைச் சேர்ந்த திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் சினிமா திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் வலம் வந்த ஜாபர் சாதிக் இருப்பது தெரியவந்ததை அடுத்து மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் விசாரணை காதலாக வேண்டும் என்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் அவர் தனது சகோதரர் மற்றும் குடும்பத்தாருடன் தலைமறைவானார். 

கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

Source : Dinamalar 

Similar News