பாரத் சக்தி! இந்தியாவில் தற்சார்பை மீண்டும் நிரூபித்தது பொக்ரான் - பிரதமர் மோடி பேச்சு!
பாரத் சக்தி என்ற பெயரில் முப்படையினரும் உள்நாட்டு தயாரிப்பு ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தும் செயல்முறை விளக்க நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் நேற்று நடைபெற்றது, அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் டி90 எனப்படும் பீரங்கி வாகனம், தனுஷ் மற்றும் சாரங் பீரங்கிகள், ரோபோட்டிக் ஆயுதங்கள், ரோன்கள், தேஜஸ் போர் விமானங்கள், நவீன இலகு ரக ஹெலிகாப்டர் மற்றும் ஆகாஷ் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றின் செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, பொக்ரானில் முப்படையினரும் காட்டிய வீரம் வியக்கத்தக்கது! புதிய இந்தியாவிற்கான அழைப்பு வானில் இருந்தும் மண்ணில் இருந்தும் எல்லா திசைகளில் இருந்தும் வெற்றி முழக்கம் எதிரொலிக்கிறது.
ஏனென்றால் பொக்ரான் இந்தியாவின் தற்சார்பு, தன்னம்பிக்கை மற்றும் தற்பெருமையை மீண்டும் ஒருமுறை இந்த நாட்டிற்கு நிரூபித்துள்ளது. அதோடு இதே பொக்ரான் தான் இந்தியாவின் அணுசக்திக்கும் ஒரு சான்றாக அமைந்தது. அதனால் இங்கிருந்தே நாம் நம் நாட்டின் உள்நாட்டு பலத்தை காண்கிறோம்! இங்கு ஏற்பட்ட குண்டு முழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது என்று இந்நிகழ்ச்சியில் பேசினார்.
Source : The Hindu Tamil thisai