இந்தியாவின் பொருளாதாரம் மீட்பு, புத்துயிர் பெற்ற வங்கிகள்...ஹார்வர்டு பல்கலைக்கு ஒரு பாடமாகும் - நிர்மலா சீதாராமன்

Update: 2024-04-20 13:09 GMT

குஜராத் வணிகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014 முதல் தற்போது வரை இந்தியா தனது பொருளாதாரத்தை மறுசீரமைத்துள்ளது. 2014 க்கு முன்பு வங்கிகள் வாரா கடனில் தத்தளித்தன. மேலும் இதனால் வங்கிகளால் நிறுவனங்களுக்கு கடன் வழங்க முடியாமல் இருந்தது.

அதோடு கோவிட் காலத்திற்குப் பிறகு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பெரிய நம்பிக்கையாக கடன் உதவி செய்து வந்த சிலிகான் வேலி வங்கி திவால் ஆனது. இருப்பினும் இந்தியாவில் உள்ள பல வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு வங்கிகள் சீராக செயல்படுவதையும் சவால்களை எதிர்கொள்வதையும் உறுதி செய்தோம். இது உண்மையில் ஹார்வர்டு பல்கலைக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று கூறியுள்ளார். 

Source : Dinamalar 

Similar News