மேற்குவங்க மக்களுக்காக பிரதமர் கொடுத்த ஐந்து உத்தரவாதங்கள் ...! யாராலும் அதை மாற்ற முடியாது!

Update: 2024-05-14 06:05 GMT

வருகின்ற மே 20ஆம் தேதி லோக்சபா தேர்தல் ஐந்தாம் கட்டத்தை தேர்தல் நடைபெற உள்ளது. அந்தக் கட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் பங்கான், பாரக்பூர், ஹவுரா, உலுபெரியா, ஸ்ரீராம்பூர், ஹூக்ளி, ஆரம்பாக் ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. 

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாரக்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது மேற்குவங்க மக்களுக்காக ஐந்து உத்தரவாதங்களை பிரதமர் அளித்தார். முதலாவதாக மதத்தின் அடிப்படையில் யாருமே இட ஒதுக்கீடு பெற முடியாது, இரண்டாவதாக ராமநவமி கொண்டாடுவதை யாரும் தடுக்க முடியாது, மூன்றாவதாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டையும் யாராலும் தடுக்க முடியாது, நான்காவதாக சிஏஏ சட்டத்தை யாராலும் திரும்ப பெற முடியாது என்றும் கடைசியாக உச்ச நீதிமன்றத்தின் ராமர் கோவில் தீர்ப்பை மாற்ற முடியாது என்றும் ஐந்து உத்தரவாதங்களை அளித்தார். 

அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள இந்துக்களை திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிவிட்டனர். சி ஏ ஏ குடியுரிமைச் சட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வில்லனாக சித்தரித்து விட்டது! 

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே சி ஏ ஏ என்ற சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலம் யாருடைய குடியுரிமையையும் மத்திய அரசு ரத்து செய்யாது அவற்றை எதிர்ப்பவர்கள் பொய்யர்கள் என்று பேசியுள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News