சொந்த வீடு, கார் கூட இல்லாத பிரதமர் ..! வெளியானது பிரதமரின் சொத்து விவரங்கள்..!

Update: 2024-05-15 12:51 GMT

கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி இந்த முறையும் வாரணாசியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். அதன்படி பிரதமரின் சொத்து விவரங்கள் குறித்த அதிகாரப்பூர் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதில், பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் எப்ஐயாரும் நீதிமன்றங்களில் எந்த ஒரு வழக்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், 1983 அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் அவர் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதோடு பிரதமரின் சொத்து விவரங்களை பார்க்கும் பொழுது, பிரதமரிடம் வீடு உள்ளிட்ட அசையா சொத்துக்கள் எதுவும் இவரது பெயரில் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், மூன்று கோடியே 2 லட்சம் ரூபாய் அசையும் சொத்துக்களாக பிரதமரிடம் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கார் போன்ற எந்த வாகனங்களும் பிரதமர் மோடியின் பெயரில் இல்லை என்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து சம்பளமும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தில் கிடைக்கும் வட்டியுமே வருமானத்தின் வழிகளாக கட்டப்பட்டுள்ளது. 

Source : Junior Vikatan 

Similar News