இளைஞர்களை கோவிலுக்கு வர வைக்க நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் எடுக்க வேண்டும் - இஸ்ரோ தலைவர் வலியுறுத்தல்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உடியனூர் தேவி கோவிலில் விழா ஒன்று நடைபெற்றது அதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத், முதியோர்கள் வந்து கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் இடமாக கோவில்கள் இருக்கக் கூடாது. ஆனால் சமூகத்தை மாற்றி அமைக்கும் இடமாக கோயில்கள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் இருக்கும் கோவில் நிர்வாகங்கள் இளைஞர்களை கோவிலுக்கு ஈர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த விருது விழாவிற்கு அதிக இளைஞர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அந்த அளவிற்கு இளைஞர்களின் எண்ணிக்கை இல்லை குறைவாகவே உள்ளது!
அதனால் கோயில்களுக்கு இளைஞர்களை வரவைக்க ஈர்க்கும் நடவடிக்கைகளை கோயில் நிர்வாகங்கள் செயல்படுத்த வேண்டும். இதற்காக இளைஞர்களை கோவிலுக்கு வரவழைக்க அங்கு நூலகங்களை நாம் ஏன் அமைக்க கூடாது என்றும் கேட்டுள்ளார்.
Source : The Hindu Tamil thisai