இலங்கை மக்கள் இந்திய பிரதமர் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர் - ராம. சீனிவாசன் பெருமிதம்!

Update: 2024-05-23 17:24 GMT

கடந்த 19ஆம் தேதி இலங்கை நுவரெலியா என்னும் மாவட்டத்தில் உள்ள சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள சீதை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது அந்த விழாவில் அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணனின் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் பங்கேற்றுள்ளார். 

அப்பொழுது பத்திரிகையாளர்களிடம் பேசிய ராம.சீனிவாசன், அயோத்தியில் ராமர் கோவில் திறந்த பிறகு இலங்கையில் சீதை அம்மன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் மலையகத்தில் கொட்டக்கலை என்னுமிடத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்பட்டு வருகின்ற தொடக்கப் பள்ளியையும் பார்வையிட்டு வந்தேன். 

அப்பொழுது வழியில் பெட்டிக்கடை நடத்தி வந்து சிங்கள பெண்ணிடம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை செல்போனில் காண்பித்து இவர் யார் தெரியுமா என்று கேட்டேன் அவர் உடனே இந்திய பிரதமர் என்று கூறிய என்னை ஆச்சரியப்படுத்திவிட்டார்! 

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு இலங்கையை மக்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்துள்ளது. மேலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் பொழுதும் பல்வேறு உதவிகளை இந்திய அரசு செய்துள்ளது. இதன் காரணமாகவே இலங்கை மக்களுக்கு அவர்களின் அதிபர் மற்றும் பிரதமரை காட்டிலும் இந்திய பிரதமர் மோடி மீது பெரிய நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது! 

Source : The Hindu Tamil thisai 

Similar News