இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் இந்தியா கூட்டணியின் முயற்சியை முறியடிப்பேன்- பிரதமர் மோடி!
எஸ்.சி , எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் இந்தியா கூட்டணியின் முயற்சியை முறியடிப்பேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
பீகார் மாநிலம் பாடலிபுத்திரா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிக்ராம் பகுதியில் பா.ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:-
பீகர் மாநிலம் சமூக நீதிக்கான போருக்கான புதிய திசையை காட்டிய மாநிலம் .எஸ். சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கும் இந்தியா கூட்டணியின் முயற்சியை முறியடிப்பேன் என்று இந்த மண்ணில் இருந்து அறிவிக்கிறேன். சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பறிபோனதற்கு காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தான் காரணம். அவர்கள் தொடர்ந்து அடிமையாக இருக்கிறார்கள் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த 'முஜ்ரா' நடனம் ஆடி வருகிறார்கள்.
ஓட்டு ஜிகாத்தில் ஈடுபட்டவர்களை நம்பித்தான் எதிர்க்கட்சி கூட்டணி இருக்கிறது. led பல்பு காலத்தில் இங்குள்ள எதிர்க்கட்சியினர் விளக்குடன் சுற்றுகிறார்கள். அதை தங்கள் வீட்டில் மட்டும் ஏற்றி வைத்துவிட்டு ஒட்டுமொத்த பீகாரையும் இருட்டில் வைத்திருந்தனர். ஜூன் 4-ஆம் தேதி இனிப்பை தயார் செய்து வையுங்கள். இது உங்கள் எம்.பி யை மட்டுமமின்றி உங்கள் பிரதமரையும் தேர்ந்தெடுக்கும் தேர்தல். உலக அரங்கில் இந்தியாவின் வலிமைக்கு நியாயம் செய்யும் பிரதமர் தேவை. ஆனால் இந்தியா கூட்டணி பிரதமர் பதவியை இசை நாற்காலி போட்டியாக கருதுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI