ரெமல் புயல் வங்காள விரிகுடாவில் தாக்க உள்ளதால் அதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மதிப்பாய்வு செய்துள்ளார்.
அதாவது, பிரதமர் நரேந்திர மோடி இன்று லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் வடக்கு வங்காள விரிகுடாவில் ரெமல் புயலிற்கான தயார் நிலை குறித்த மறு ஆய்வு செய்வதற்கான கூட்டத்தை தலைமை தாங்கினார்.
ஐ எம் டி கணிப்பின்படி இன்று நள்ளிரவில் மேங்லாவின் தென்மேற்கு அருகிலுள்ள சாகர் தீவுகள் மற்றும் கெபுபாரா இடையே வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையை புயல் கடக்க கூடும் என்றும், இதனால் அப்பகுதிகளில் அதிக மழை பொழிவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதாலும், தேசிய நெருக்கடி மேலாண்மை குழு மேற்கு வங்க அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்பொழுதே சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசு மாநில அரசுக்கு வேண்டிய முழு ஆதரவையும் வழங்கி உள்ளது என்றும், அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதோடு இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில், ரெமல் புயலையைத் தொடர்ந்து தயார்நிலையை மதிப்பாய்வு செய்யப்பட்டது. பேரிடர் மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் பிற தொடர்புடைய அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Source : Asianet news Tamil