திமுகவினரின் சந்தர்ப்பவாத கோவில் வருகை....பிரதமராக மோடியே நீடிப்பார் - மன்னார்குடி ஜீயர் தடாலடி!

Update: 2024-06-14 16:45 GMT

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் தனியார் ஜவுளி கடையின் புதிய கிளையின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மன்னார்குடி ஸ்ரீ சேந்தலங்கார சம்பத் குமார ராமானுஜ ஜீயர் அவர்கள் ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்த பிறகு, அப்பகுதியில் உள்ள காஞ்சிபுரம் சில்க்ஸ் பட்டுப் புடவைகள் சேகரிப்பு குறித்து ஆய்வு செய்தார். 

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இந்து கோவில்களை கட்டுப்படுத்துவது மிகுந்த கவலையை அளிக்கிறது. அனைத்து மதங்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்று கூறுகின்ற திமுக அரசு இந்து நலன்களை மட்டும் குழி தோண்டி புதைக்கிறது. 

இந்த திமுக அரசாங்கத்திற்கும் தைரியமும் வலிமையும் இருந்தால், அது பிற மதத்தினருக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்று என்று சொல்லும் திமுக இந்து சமய கோவில்களை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. நாம் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்கிறோம், ஆனால் கிறிஸ்தவ தேவாலயத்திலோ, மசூதியிலோ இது போன்ற ஒழுங்குமுறையை அவர்களால் கொண்டு வர முடியவில்லை. தைரியம் இருந்தால் இந்து சமயத்திற்கு இந்து அறநிலையத்துறை இருப்பது போன்று தேவாலயத்திற்கும், மசூதிக்கும் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் இந்து மதத்திற்கு இருக்கும் கட்டுப்பாட்டை அகற்ற வேண்டும் என்பது என் கருத்து என்று பேசியுள்ளார். 

அதுமட்டுமின்றி, இந்து சமய அறநிலையத்துறைக்குள் நடக்கும் ஊழலையும் கண்டித்தார். அதோடு பிரதம நரேந்திர மோடி இந்து தர்மத்திற்காக செய்யும் அர்ப்பணிப்பை பாராட்டி பேசி உள்ளார். மேலும், பிரதம நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மட்டுமல்லாமல், நான்காவது மற்றும் ஐந்தாவது முறையும் பிரதமராக மோடி தான் வருவார் என்று கூறியுள்ளார். சிதம்பரம் மற்றும் ஊட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிந்து விரோத பேச்சுகளை தான் முன்வைக்கிறார்கள். ஆனால் தேர்தலின் போது மட்டும் கோவில் கோவிலாக சுற்றி ஆசிர்வாதம் வாங்குகிறார்கள், அதன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் என்று திமுகவினர் சந்தர்ப்பவாத தேர்தல் நேர கோவில் வருகை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். 

Source : The Commune 

Tags:    

Similar News