தலைவர்கள் சிலைகள் கட்சி கொடி கம்பங்களை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. திருவாரூர் நாச்சியார் கோவிலில் எம்ஜிஆர் சிலையை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றியதை எதிர்த்து ஹை கோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு ஸ்ரீமதி ஆகியோரின் அமர்வு குழு விசாரித்தது நீதிபதிகள் கூறும் போது, பொது இடங்களில் சிலை, கட்சி கொடி வைப்பது ஏற்க முடியாது.
தங்கள் தலைவரின் சிலைகளை, கட்சி கொடிகளை அலுவலகம் உள்ளே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே. எந்தக் கட்சியாக இருந்தாலும் இயக்கமாக இருந்தாலும் இதை அனுமதிக்க முடியாது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபராத தொகையை விதித்ததுடன், வழக்கை தள்ளுபடி செய்து கேசை வாபஸ் பெற உத்தரவிட்டனர்.