தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு டேவிட் மைக்கேல் என்பவர் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் பயிலும் 3 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக அந்த மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.அதன் பேரில் விசாரணை நடததிய திருவேங்கடம் போலீசார் கன்னியா குமரியில் பதுங்கி இருந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
தமிழகத்தில் தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஆனால் தமிழக அரசு இதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்து மாதிரி தெரியவில்லை. வரும் காலத்தில் இது மாதிரி நடக்காமல் ஒரு குழுவை அமைத்து தகுந்த முறையில் நடவடிக்கை எடுக்கும் பெற்றோர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.