டெல்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நடந்த பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற பேசினார். இதுபோன்ற நிகழ்ச்சியில் நாட்டின் கலாச்சாரம் மட்டும் பண்பாடு குறித்த தகவல்களை மாணவர்கள் அறிய முடியும். மாணவர்கள் கட்டாயமாக ஏதாவது ஒரு இசை கலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது,இதனால் அவர்களின் மனதில் ஒரு பண்படுத்தப்பட்ட அமைதியான நிலை உருவாகும். இது அவர்கள் படிப்பில் கவனம் செல்வதற்கு உறுதுணையாக இருக்கும்.
கலைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இந்தக் கலையின் வாயிலாக நான் நிம்மதியை உணர்கிறேன். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு சுந்தர் நர்சரி வந்திருப்பதால் ஆகா கானன நினைவில் கொள்வது அவசியம். சுந்தர் நர்சரியை அழகு படுத்துவதில் அவர்களின் பங்களிப்பும்,கலைஞர்களுக்கு ஆசிர்வாதமாக அமைந்தது, இந்த நிகழ்ச்சியின் மக்களின் இதயங்களில் ஒரு இடத்தை பிடித்துள்ளது மிகப்பெரிய வெற்றியாகும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.இந்த இசையால் நம் நிம்மதியாக உணர்கிறேன் எனவும் இசை நிகழ்ச்சியை கையில் தாளம் போட்டு பிரதமர் மோடி ரசித்து கேட்டார்.