மொரீசியஸ் மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வார்கள்: பிரதமர் மோடி உறுதி!

Update: 2025-03-14 17:48 GMT
மொரீசியஸ் மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வார்கள்: பிரதமர் மோடி உறுதி!

அடுத்த 5 ஆண்டுகளில் மொரீசியஸ் மாணவர்கள் ஐந்து லட்சம் பேர் இந்தியாவில் கல்வி பயில்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணம் சென்றுள்ளார். அவரை அந்நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் வரவேற்றார் பின்னர் இருநாட்டு தலைவர்களும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்துக்கள்.

சிறப்பு விருந்தினரான பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசும் போது, கடலோர காவல் படையினரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நாங்கள் ஒத்துழைப்போம். கலாச்சாரத்திலும் இந்தியாவும் மொரீசியஸம், ஒற்றுமையாக உள்ளனர், சுகாதாரம் விண்வெளி மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை நாங்கள் ஒருவர் கூறுவர் முன்னேறி வருகிறோம்.

அடுத்த ஐந்தாண்டுகளில் மொரீசியஸ் நாட்டின் 5 லட்சம் மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வார்கள். இந்த தினத்தில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம், இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருதை (the Grand commander of the order of the star and key of the Indian Ocean) பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் டாக்டர் நவீன் ராமகூலம் வழங்கினார். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதம மோடி பெற்றார்.

Similar News