சிறுமிக்கு பாலியல் தொல்லை:ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு!

Update: 2025-03-14 17:59 GMT
சிறுமிக்கு பாலியல் தொல்லை:ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தன் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து, எண்ணூர் அருகே உள்ள சேல வாயில்-ஆண்டாள் நகர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். ராஜ்குமார் குடும் பத்தினருடன், ராஜ்குமாரின் மனைவியின் சகோதரியான 17 வயது சிறுமியும் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண் டில் ராஜ்குமார் தன் மனைவியின் சகோ தரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்ப மானார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், எண்ணூர் அனைத்து மக ளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, தற்போது திருவள்ளூர் மாவட்ட போக்சோ வழக்கு களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், ராஜ்குமார் மீதான குற் றம் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை, திருவள்ளூர் மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி நேற்று முன் தினம் அளித் தார். அதில், ராஜ்குமாருக்கு, சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக் காக ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News