மேற்கு வங்கத்திலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை மதுரை ரயில் நிலையத்தில் போலீ ஸார் பறிமுதல் செய்து, சிறுவன் உள்பட மூவரைக் கைது செய்தனர்.மேற்கு வங்க மாநிலம், புரூலியாவிலி ருந்து நெல்லை செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரக சியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகா லையில் மதுரை ரயில் நிலையத்துக்கு வந்த அந்த ரயிலில் குறிப்பிட்ட பெட்டியில் ஏறி சோதனையிட்டனர்.
அப்போது, சந்தேகத் துக்கிடமான வகையில் இருந்த 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களின் உடைமைகளையும் சோதனையிட்டனர். இதையடுத்து மூவரும் கொண்டு வந்த பைகளில் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தியது தெரிய வந்தது. பின்னர், மூவ ரையும் ரயில்வே காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை ராஜவள்ளிபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார், பாலமடையைச் சேர்ந்த டேவிட்ராஜா, 17 வயது சிறுவன் என்பதும், கஞ்சா பொட்டலங்களை மேற்குவங்கத்திலிருந்து வாங்கி ரயில் மூலம் தென்மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து 8 கிலோ கஞ்சாவை பறிமு தல் செய்த போலீஸார், மூவரையும் கைது செய்தனர்.