ட்விட்டரை ஓரங்கட்டிவிட்டு இந்தியாவின் 'கூ' செயலியை பயன்படுத்தும் நைஜீரிய அரசு.!

ட்விட்டர் நிறுவனத்தின் பயன்பாடுகளை தடை செய்துவிட்டு, தற்போது இந்தியாவின் கூ செயலியை நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த தொடங்கியுள்ளது.

Update: 2021-06-11 06:01 GMT

ட்விட்டர் நிறுவனத்தின் பயன்பாடுகளை தடை செய்துவிட்டு, தற்போது இந்தியாவின் கூ செயலியை நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த தொடங்கியுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் உலக அளவில் வளர்ச்சி அடைந்த பின்னர் அதன் செயல்பாடுகளில் மாற்றங்கள் தென்பட தொடங்கியது. அதாவது தான் வைக்கும் சட்டத்தை உலக நாடுகள் கேட்க வேண்டும் என்ற அதிகாரப்போக்குடன் செயல்பட ஆரம்பித்தது.

அதன்படி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கையே முடக்கினர். இது உலகளவில் பேசும் பொருளாக மாறியது. எனவே உள்நாட்டிலேயே தனது அதிகாரப் போக்கை தவறாக ட்விட்டர் நிறுவனம் பயன்படுத்தியது என டிரம்ப் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.




 


இதனிடையே நைஜீரியா நாட்டின் அதிபர் முகமது புகாரியின் ட்விட்டர் கணக்கில், தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார். இந்த கருத்து மோதலை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது என அவரது கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த நைஜீரியா அரசு ட்விட்டரை நிரந்தரமாக தடை விதித்தது.

இந்நிலையில், ட்விட்டருக்கு பதிலாக இந்தியாவின் கூ செயலியை நைஜீரியா அரசு பயன்படுத்த தொடங்கியுள்ளது. விரைவில் அரசின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியா சட்டத்திட்டங்களுக்கு எதிராகவும் ட்விட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்திய அரசு சமூக வலைதளங்களுக்கு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதனை ஏற்கும் நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் செயல்பட முடியும் என அதிரடியாக முடிவை அறிவித்தது. இதனால் மற்ற அனைத்து நிறுவனங்களும் இந்தியாவின் சட்டத்தை ஏற்பதாக வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News