ஊட்டியில் தி.மு.க அ.ராசாவை துரத்தியடித்த ஜான்சிக்கு நிவாரண பொருட்களை வழங்கி, உடன் உணவருந்திய பா.ஜ.க இளைஞரணி தலைவர்கள்!

ஊட்டியில் தி.மு.க அ.ராசாவை துரத்தியடித்த ஜான்சிக்கு நிவாரண பொருட்களை வழங்கி, உடன் உணவருந்திய பா.ஜ.க இளைஞரணி தலைவர்கள்!

Update: 2019-08-17 12:50 GMT

கனமழையால் நீலகிரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இதேபோல பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினரும் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நீலகிரி சென்ற தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின், வழக்கம்போல போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, மற்றவர்களை குறை கூறிவிட்டு அவரது கடமை முடிந்தது என்று கிளம்பி விட்டார்.





ஸ்டாலினின் இந்த நாடகங்கள் அரங்கேறி முடிந்த பின்னர், நீலகிரி தொகுதி எம்.பி. அ.ராசா தொகுதி மக்களிடம் நல்ல பிள்ளையாக தலையை காட்டினார். அவரைப் பார்த்ததும் அவருக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க, காரில் இருந்து இறங்காமலேயே ஓட்டம் பிடித்தார். தி.மு.க-வினர் அந்த மக்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி ஒருவழியாக தப்பித்தனர்.




https://twitter.com/SuryahSG/status/1161506907187744768?s=20


இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தி.மு.க-வையும், அ.ராசா, மு.க.ஸ்டாலினையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


இந்த நிலையில் நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் பா.ஜ.க இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் தலைமையிலான குழுவினர், அ.ராசாவை துரத்தியடித்த பகுதிக்கும் சென்றனர். அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.





பின்னர் அ.ராசாவை துரத்தி அடித்த தெருவுக்கு சென்றதும் அந்த மக்கள், பா.ஜ.க-வினரை அன்புடன் வரவேற்றனர். அங்கு அ.ராசாவை துரத்தியடித்த ஜான்சிக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.


அப்போது வினோஜ் செல்வமும், அவருடன் வந்த பா.ஜ.க இளைஞரணி பொதுச்செயலாளர் வசந்தராஜன் உட்பட இளைஞரணி தலைவர்கள் ஜான்சியுடன் மதிய உணவை உண்டனர்.


பின்னர், அவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட வினோஜ் ப செல்வம் குழுவினர் மற்ற வீடுகளுக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கினர்.


பா.ஜ.க இளைஞரணியின் நிவாரண உதவி வழங்கும் பணி நீலகிரியில் தொடர்ந்து நடந்து வருகிறது.


Similar News