மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் தொடக்கம்- பல்துறை வல்லுனர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார்

இன்று முதல் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் தொடக்கம் பல்துறை வல்லுநர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார்

Update: 2022-11-21 13:00 GMT

2023-ம் ஆம் ஆண்டுக்கான மதிய பட்ஜெட் தயாரிப்பு பணிகளை நிதி அமைச்சகம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. இந்த பணிகளை நிதி மமந்திரி நிர்மலா சீதாராமன் மேற்கொள்கிறார். இதுகுறித்து நிதி அமைச்சகம் தனது டுவிட்டர் தளத்தில் '2023- 24' ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய பணிகளை 21ஆம் தேதி முதல் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்குகிறார். அதன்படி பல்வேறு துறை வல்லுநர்களுடன் ஆலோசனைகளை அவர் நடத்துகிறார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் தொழில் துறை உள்கட்டமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த வல்லுநர்களுடன் நண்பகல் மற்றும் பிற்பகலில் இந்த ஆலோசனைகள் நடத்தப்படுவதாக நிதி அமைச்சகம் அதில் கூறியுள்ளது .இந்த சந்திப்புகள் காணொளி காட்சி மூலம் நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.





 


Similar News