இனி போதை, ரவுடியிச பாடல்கள் ஒளிபரப்ப கூடாது - பண்பலை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

வன்முறை மற்றும் ரவுடியிசத்தை போற்றும் பாடல்களை ஒளிபரப்ப மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

Update: 2022-12-02 03:04 GMT

வன்முறை மற்றும் ரவுடியிசத்தை போற்றும் பாடல்களை ஒளிபரப்ப மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

எப்.எம் ரேடியோ சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனுப்பி உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'எப்.எம் ரேடியோ சேனல்களை ஒளி பரப்பதற்கான உரிமம் அளிக்கப்பட்டபோது கையெழுத்தான ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள விதிமுறைகளையும் அறிவுறுத்தலையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், எனவும் வன்முறை ரவுடிசம் போதை பொருள் பழக்கம் ஆகியவற்றுடன் புகழும் வகையிலான பாடல்களையோ நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்' எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதில் கூறப்பட்டுள்ளது.


Source - Dinamalar



Similar News