யாரும் இங்கு சிறப்பு அந்தஸ்துள்ள குடிமக்கள் அல்ல எல்லோரும் சமமே- பிரதமர் மோடி!
யாரையும் சிறப்பு அந்தஸ்து உள்ள குடிமக்களாக ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை .அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருவதாகவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி விடுவார்கள் என்றும் எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த நிலையில் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மோடி சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராகத்தான் பேசுகிறேன் என்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது அதைத்தான் நான் கூறி வருகிறேன் பாஜக சிறுபான்மையினருக்கு எதிராக இருக்காது. இப்போது மட்டுமல்ல வரும் காலங்களிலும் கூட கர்நாடகத்தில் அனைத்து முஸ்லீம் மக்களையும் ஓபிசி பிரிவுக்காக இட ஒதுக்கீட்டில் கொண்டுவர காங்கிரஸ் முயற்சிக்கிறது. நமது அரசியல் சாசனத்தில் உள்ள மதச்சார்பின்மை உணர்வை தங்களின் தேர்தல் அரசியலூக்காக அழித்தவர்கள் இவர்கள்தான் என்று நம்புகிறேன்.
அரசியல் அமைப்பின் உணர்வை மீட்டெடுக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் மக்களவை தேர்தல் முடிவு குறித்து பேசிய பிரதமர் மோடி 2019 தேர்தல் முடிவுகளின் படி தென் மாநிலங்களிலும் பாஜக தான் பெரிய கட்சி .இந்த முறையும் நாங்கள் தான் பெரிய கட்சியாக வருவோம். கூட்டணி கட்சிகள் கூடுதல் பலம் சேர்க்கும் .தெற்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கூடுதல் வெற்றிகளைப் பெறுவோம். 400 தொகுதிகளைக் கைப்பற்றுவதே எங்கள் இலக்கு. நான்காம் கட்ட தேர்தல் முடிவுகள் எங்கள் மதிப்பீடு சரி என்பது உறுதியாகி உள்ளது என தெரிவித்துள்ளார்.
SOURCE :Dinamani